படித்ததில்,பிடித்தது

March 2, 2010 at 5:38 am (எனக்கு பிடித்தவை :))

உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!


உள்ளுக்குள் அழுகிறேன்
உன் காதல் தந்த வேதனையால்
வெளியில் சிரிக்கிறேன்
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக..
உன்னுடன் சில காலம்..
உன் நினைவுகளுடன் சில நாள் ..
இவை அனைத்தையும் மறக்க
நினைக்கிறேன் ஒரு கானம்
மறு கானம் வேண்டாம் என்கிறது
என் மனம்..


இன்றுடோடு என் வாழ்க்கை பயணம்
முடிகிறது ..
காதல் என்னும் தொடர் கதைக்கு
முற்று புள்ளி வைக்கிறேன்..
என் காதலுக்கு மட்டும் தான்
உனக்கு இல்லை..
உன்னை விட்டு பிரிகிறேன் நிரதரமாக..
ஏன் என்றால் நீ இன்றி என் வாழ்க்கை
வெள்ளை காகிதம்..
உன்னால் எழுதிய கதை..
இன்று உன்னால் தான் அது
இன்று மிண்டும் ஒரு வெள்ளை
காகிதம் ஆகிறது..
ஆனால்
இறந்த காலம் மிண்டும் வந்தால்
பிரிந்த உன்னை மிட்டு கொள்வேன்..
இது நிச்ச்யம்

எத்தனையோ உறவுகளை
கண்டேன்..
உன்னை போல் எந்த உறவும்
என்னை நேசித்ததில்லை..
சில உறவுகளின் பிரிவுக்கு
நான் வருந்தியதில்லை..

ஆனால்,
உன் பிரிவு என்னை
விழவைத்தது.
உன்னை அதிகம் நேசித்தால்
அதை விட இரு மடங்கு
உன்னை வெறுக்கிறேன்..

கண்ணிருடன் வாழும்
காலம் இன்று
இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு
வாழ்வதினால் அன்பே


வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..

என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?கனவுகள்
நிஜமாகவும் இல்லை..

காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை ?


உன் கை பிடித்து
உன் பாதம் தொடர ஆசை
நீ எனக்கு முன்னாலும்
என் பெயருக்கு முன்னாலும்
வருவாயா….?

Frwd msg :)

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.